வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு நாளை காலை 7.50க்கு பிறக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு நாளை காலை 8.41க்கு பிறக்கிறது.
அத்துடன், நாளை அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும்.
கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை காலை 7.57 முதல் 8.47 வரையும், நாளை மறுதினம் (15) காலை 7.52 முதல் 9.51 வரையும், திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை(14) காலை 8.50 முதல் 9.42 வரையும், நாளை மறுதினம் (15) காலை 8.35 முதல் 9.50 வரையும் சுபநேரம் காணப்படுகிறது
Be First to Comment