மேஷம்
காலசக்கரத்தின் முதல் ராசியான உங்களின் ராசிக்கு விரயம் பயணம் மற்றும் மோட்சம் ஸ்தானத்தில் சுமார் ex 12 வருடங்களுக்கு பிறகு ஆட்சியில் அமர்கிறார் குரு ..
இனி உங்களுக்கு குருவருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இயல்பான வாழ்க்கையில் எந்தவொரு மாற்றம் வந்தாலும் உங்களுக்கு சாதகமாகவே முடித்து வைப்பார்.
சுகஸ்தானம் குருவின் பார்வை பலத்தால் வலுபடுவதால் இனியெல்லாம் சுகமே.
மனதில் அரித்து கொண்டிருந்த பிரச்னைகளும் மன அழுத்தங்களும் மொத்தமாக குருவின் பார்வையால் நல்லதாக முடியும்.
தடங்கலாக இருந்து உங்களின் முன்னேற்ற வாய்ப்புகள் இனி குருவின் பார்வையால் ஏற்றமாக மாறும்.
திருச்செந்தூர் முருகனை
ஓரு முறையாவது சென்று தரிசித்து வழிபட்டு வந்தால் உங்களின் சுய
முன்னேற்றத்தை வேகபடுத்தலாம் .
______________
ரிஷபம்
கால சக்கரத்தின் இரண்டாவது ராசி வீடான தனம் குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானமான உங்க ராசிக்கு
12 வருடங்களுக்கு மிக மிக சிறப்பான லாப ஸ்தானமான மீனராசியில் ஆட்சி பெற்று வளர்ச்சி ஓன்றையே தரவிருக்கிறார் முழுசுபகிரகமான குரு பகவான் …
குருவின் ஸ்தான பலமும் பார்வைபலமும் ஒரு சேர சாதகமாக கிடைக்கும் போகிறது ரிஷப ராசியினருக்கு.
உங்கள் வாழ்க்கையில் அபரிதமான வளர்ச்சி என்பது இனி வரும் காலமே.
குருவின் பார்வை பலத்தால் முயற்சி முன்னேற்றம் புத்திரர்கள் புத்தி பூர்வ புண்ணியம் மற்றும் களத்ர ஸ்தானங்கள் வலுவடைய போவதால் நீங்கள் கனவிலும் நினையாத உச்சத்தை அடைந்து விடுவீர்கள் ..
தவிர அதே சமயத்தில் உங்க ராசிதிபதி சுக்ரனுக்கு நண்பரான சனி ஜீவன கர்ம ஸ்தானத்தில் ஆட்சியாக போகிறார்.
_
மிதுனம்
கடமையே கர்மமாக இதுவரை இருந்த வந்த மிதுன ராசியினருக்கு
12 வருடங்களுக்கு பிறகு உங்க ராசிக்கு ஜீவன கர்ம ஸ்தானமான மீனராசியில் ஆட்சி பெற போகும் முழு சுபகிரகமான குரு பகவான் உங்களது வேலை , தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த வந்த அனைத்து பிரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைப்பார்…
குரு தான் ஆட்சியில் இருக்கும் தன் சொந்த ராசி வீட்டிலிருந்து தன் உச்ச வீடும் மற்றும் உங்க ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானங்களை குறிக்கும் கடக ராசியை தன் பார்வை பலத்தால் செம்மைபடுத்த இருக்கிறார்.
இனி தனவிருத்தி அதிகரிக்கும்.
குடும்பத்தில் சந்தோஷமான அமைதி நிலவும்..
உங்கள் சொல்வாக்கால் அனைத்து விசயங்களும் உங்கள் எண்ணம் போல நிறைவேறும்..
மேலும் சுகம் ஸ்தானத்தை தன் பார்வை பலத்தால் வலிமைபடுத்துவதால் வசதிகள் பெருகும்.
ருண ரோக சத்ரு ஸ்தானங்களையும் தன் பார்வை பலத்தால் உங்களுக்கு சாதகான பலன்களை அதிகரிக்க வைப்பார்
கடகம்
12 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மற்றொரு சொந்த ராசி வீடான மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகி ஆட்சியில் இருக்க போகிறார் முழு சுப கிரகமான குரு.
பாக்ய ஸ்தானத்தில் குரு ஆட்சியில்
வேறென்ன இதை விட பாக்யம் செய்திருக்க வேண்டும் நீங்கள்.
குரு பார்க்க கோடி நன்மைகள்.
அதிலும் தன்னுடைய உச்ச வீடான உங்களின் கடக ராசியை பார்க்க போவதால் கடந்த சில காலங்களாக இருந்த மன தளர்ச்சியை போக்க இருக்கிறார்..
குரு பார்வையால் அதி தீவிர தன்னம்பிக்கை உங்களுக்கு வரும்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபலம் இனி உங்களிடம் குடி கொள்ளும்
உங்க ராசிக்கு மூன்று மற்றும்
பஞ்சம ஸ்தானங்களையும்
குரு தன் சுபபார்வையால் செம்மைபடுத்த இரு்ப்பதால்
உங்களின் சுய வளர்ச்சி அதிகரிக்கும்.
உங்களின் வாரிசுகள் வழியில் நல்ல செய்திகள் வரும்.
முக்கியமாக உங்களுக்கு புத்திசாலித்தனம் நிறைந்து இருக்கும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு அஷ்டாமதிபதியான குரு ஆட்சி பெறுகிறார்.
இதுவரை இருந்த வந்த தடைகளை எப்படி உடைத்து முன்னேறுவது என்று குரு வழிகாட்டுவார்..
குருவின் சிறப்பான நேர் கொண்ட பார்வை பலத்தால் உங்க ராசிக்கு இரண்டாம் ஸ்தானமான தனம் குடும்பம் வாக்கு ஸ்தானங்களை பார்த்து இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றங்களை தர இருக்கிறார்.
தனவிருத்தியாகும் .
உங்க பேச்சை கேட்டவர்களும் உங்களை இதுவரை நம்பியவர்களும் உங்களது தலைமை சாதுர்யத்தால் வளர்ச்சி பெறபோகயிருப்பதால் உங்களுடைய செல்வாக்கும் சொல்வாக்கும் பொதுவெளியில் உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும்.
தொல்லை கொடு்த்து கொண்டிருந்த குடும்ப பிரச்னைகள் முற்றிலுமாக குரு தீர்த்து வைப்பார்.
மேலும் சுகம் .வாகனம் மற்றும் தாய்
ஸ்தானங்களை தன் பார்வை பலத்தால் வலிமையாக்குவதால்
அஷ்டமத்து குருவின் பார்வை பலத்தால் நீங்கள் எதையும் சாதிக்கலாம் ..
கன்னி
குரு பார்க்க கோடி நன்மைகள் என்பது முன்னோர் வாக்கு.
அதிலும் ராசிக்கு சம சப்தம ஸ்தானத்தில் குரு ஆட்சியில்
12 வருடங்களுக்கு பிறகு வருகிறார்.
ஆனந்தம் பேரானந்தம் இனி..
வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க போகறீர்கள்.
உங்களை சுற்றி ஓரு வலிமையான Aura இருக்கும்.
கவசம் போல..
குரு தன் சுப பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்க இருக்கிறார்.
அபரிதமான வளர்ச்சிக்கு வித்திடுவார் குரு.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
உங்க வாழ்க்கையில அதிர்ஷ்டம் என்ற வார்த்தையோட அர்த்தம் அறியும் நேரம் விரைவில்..
உங்களால இது முடியாது என்று யாராவது சொன்னால் சிரித்துக்கொண்டே மிக சுலபமாக செய்து முடிப்பீர்கள் விரைவில்
சனியும் ஆறாம் ஸ்தானத்தில் ஆட்சி பெற இருப்பதால் .
துலாம்
குரு ஆறாம் ஸ்தானத்தில் ஆட்சியிலிருக்க போகும் நேரத்திலேயே உங்க ராசிக்கு யோககாரகனான சனி தவமிருந்து கெஞ்சினாலும் கிடைக்காத பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி உங்க எதிர்கால வாழ்வை வளமாக்க போகிறார்.
மன தளர்ச்சியும் மன அழுத்தமும் உங்களை விட்டு முற்றிலுமாக விலகும்.
இதுவரை தடங்கலாக இருந்த அனைத்து விஷயங்களும் உங்க புத்தி கூர்மையால் உங்களுக்கு சாதகமாக முடியம்.
குருவின் பார்வை பலத்தால் ஜீவன ஸ்தானம் பலமடைவதால் துலாம் ராசியினருக்கு தொழில் மற்றும் வேலை வகையறாக்களில் சாதகமான ஏற்றங்கள் வந்து சேர இருப்பதால் அதை வாங்கி தர இருக்கும் குருவிடம் சரணடையுங்கள்.
குருவின் பார்வை பலத்தால் உங்க ராசிக்கு தனம் குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானங்கள் பலமடைய இருப்பதால் உங்களின் எதிர்கால வாழ்க்கை செம்மையாக இருக்க போவதால் வாழ்த்துக்கள்.
விருச்சிகம்
12 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மற்றொரு ராசி வீடான மீனம் ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார் முழு சுப கிரகமான குரு.
தவமிருந்து கெஞ்சினாலும் கிடைக்காத பஞ்சம பூர்வு புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பொறுப்பேற்கிறார் குரு..
உங்க வாழ்க்கையின் உச்சத்தை தொட போகிறீர்கள்.
உங்களின் சமயோசித புத்திசாலித்தனத்தால் எங்கும் எதிலும் வெற்றி கொள்வீர்கள்.
பிள்ளைகளால் மிகவும் நன்மைகள் உருவாகும்..
குரு பார்க்க கோடி நன்மைகள்.
அதிலும் தன்னுடைய உச்ச வீடான கடக ராசியை அதாவது உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தை பார்க்க இருப்பதால் விருச்சிக ராசியினருக்கு இனி பொற்காலமே என்பதில் எந்த ஓரு சந்தேகமும் இல்லை.
உங்கள் ராசிக்கு லாபம் ஸ்தானம் மற்றும் ஜென்ம ராசியையும் குரு தன் சுபபார்வையால் செம்மைபடுத்த இருப்பதால் உங்கள் எதிர்காலத்தை குறித்து ஓரு நிச்சயமான தன்மையை அளிப்பார் மீன ராசி குரு.
அனுமனை போல தன் பலம் தெரியாமலும் இருந்தும் ஆனால் தெரிந்தவுடன் விஸ்வரூபம் எடுத்ததை போல உயருங்கள்.
தனுசு
12 வருடங்களுக்கு பிறகு உங்க ராசியதிபதி தன்னுடைய இன்னொரு சொந்த ராசி வீடான மீன ராசி என்னும் உங்க ராசிக்கு மாத்ரு மற்றும் சுக ஸ்தானத்துக்கு பெயர்ச்சியாகிறார்.
நான்கு என்னும சுகம் மற்றும் வசதிகள் ஸ்தானத்துக்கு சென்று தனுசு ராசியினருக்கு மிக சொகுசான வாழ்க்கையை இனி கொடுப்பார் குரு.
குருவின் பார்வை பலத்தால் அஷ்டம ஸ்தானத்தால் இதுவரை இருந்து வந்த தடைகள் கஷ்டங்கள் பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரும்.
குருவின் பார்வை பலத்தால் ஜீவன ஸ்தானம் வலுவடைவதால் தொழில் மற்றும் வேலை வகையறாக்களில் மிக சிறந்ததொரு ஏற்றம் இருக்கும்..
இதை விட ஏழரை சனியின் தாக்கமும் விரைவில் விலக இருப்பதால்
தனுசு ராசினர் சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறார்கள் .
மகரம்
தன்னுடைய இன்னொரு சொந்த ராசி வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகி வரும் குரு.
விரைவில் தன ஸ்தானத்தில் உங்க ராசியதிபதி சனியும் ஆட்சியில் இருக்க போவதால்
மகர ராசியினரின் சந்தோஷத்துக்கு வானமே எல்லை இனி..
முயற்சி ஸ்தானத்துக்கு பெயர்ச்சியாகும் குருவால் இனி அனைத்து விசயங்களிலும் முன்னேற்றம் தான் உங்களுக்கு.
குரு பார்க்க கோடி நன்மைகள்.
குருவின் தன் வலிமையான சுப பார்வையால் உங்க ராசிக்கு 7/9/11 ஸ்தானங்களை பார்க்க இருப்பதால்
வாழ்க்கை துணை வகையில் அதிர்ஷ்டங்கள் வரும்.
பாக்ய ஸ்தானத்துக்கு கிடைக்கும் குருவின் பார்வையால் சகல செளபாக்யங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
லாப ஸ்தானத்துக்கு கிடைக்கும் குருவின் பார்வையால் உங்களின் சுய வளர்ச்சி அதிகரிக்கும் ..
விரைவில் ஜென்ம சனியும் முடிவடைய இருப்பதால் மகர ராசியினருக்கு இனி மகிழ்ச்சியான நாட்களே.
கும்பம்
12 வருடங்களுக்கு பிறகு தனம் குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் குரு ஆட்சியேற உங்க ராசியதிபதி சனி
விரய ஸ்தானத்திலிருந்து விரைவில் விலகி உங்க ஜென்ம ராசியில் ஆட்சியில் அமர இதை விட என்ன புண்ணியம் கும்ப ராசியினர் செய்திருக்க வேண்டும்…
இதை தவிர ராகு மூன்றாம் எனும் முயற்சி ஸ்தானத்திலும் கேது பாக்ய ஸ்தானத்திலும் உலவ இருப்பதால்
உங்க வாழ்நாளில் பொற்காலத்தை நோக்கிய நகர்வு இனி .
Growth ..value addition..development
இவை தான் மனசு முழுக்க நிறைந்திருக்கும்.
குரு பார்க்க கோடி நன்மைகள் .
அந்த சுப குருவின் பார்வைபடும் ஸ்தானங்கள் உங்க ராசிக்கு 6/8/10..
உடல் ரீதியாக மிகுந்த சுறுசுறுப்பு வரும்.
மன நோய்கள் இருந்தால் காணாமல் போகும்.
இதுவரை இருந்து வந்த தடைகள் தடங்கல்கள் தவிடு பொடியாகும்.
குருவின் ஸ்தான பலத்தால் தனவிருத்தியடையும்.
உங்க சொல்வாக்கு எங்கும் எதிரொலிக்கும்.
குடும்பத்தில் மிகுந்த சந்தோஷம் நிலவும் .
ஆதலால் வரும் எதிர்காலம் உங்க தனித்தன்மையே வெளி கொணர வாய்ப்பாகவே இருக்கும்…
மீனம்
விரய ஸ்தானமான கும்பத்திலிருந்து விலகி சுமார் 12 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய சொந்த ராசி வீடான மீனத்திலும் மற்றும் கால சக்கரத்தின் மோட்ச ஸ்தானமான உங்க ராசியில் உங்க ராசியதிபதியான முழு சுபகிரகமான குரு ஜென்ம ராசியில் அமர்ந்து உங்க எதிர்கால வாழ்க்கையை வளமையாகவும் வலிமையடையவும் செய்ய போகிறார் குரு…
ஜென்ம குருவில் ஶீ ராமர் வனவாசம் சென்றாலும் ராம அவதாரத்தின் முக்கிய நோக்கங்கள் நிறைவேறியது அதன் பின்னர் தான்.
அது போல உங்க வாழ்க்கையின் லட்சிய நோக்கங்கள் நனவாக இனி வருங்கால நேரங்கள் சாதகமாக இருக்கும்.
இனி குருவின் சுப பார்வையால்
5/7/9 ஸ்தானங்கள் மிகுந்த நற்பலன்களை தர போகின்றன்.
அதாவது வாழ்க்கை துணை வகையில் அதிர்ஷ்டம்.
பிள்ளைகள் வழியில் சுபமான செய்திகள் வரும்.
மிக மிக சிறப்பாக பாக்ய ஸ்தானத்தை குரு பார்வையிட இருப்பதால் எங்கும் எதிலும் பாக்யசாலியாக இருப்பீர்கள்..
மீன ராசியினருக்கு அடுத்த குரு பெயர்ச்சியில் குரு உங்க ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானமான
மேஷத்தில் அமர போகிறார்.
ஆகவே இப்பவே தயாராகுங்க
Be First to Comment