Press "Enter" to skip to content

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி மிகவும் கவலையடைந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு  நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறுமை கோட்டுக்கு உட்பட்டோர் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உலக வங்கி உறுதி பூண்டுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *