யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Be First to Comment