Press "Enter" to skip to content

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக – கலாசார மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றுமொரு தலைமுறைக்கு கடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ் சிங்கள ஆதிக்குடிகளின் தொன்மைவாய்ந்த மரபுகளை நினைவுபடுத்துகிறது.

புதிதாக பிறக்கும் புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இச்சவால் மிகுந்த காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக நாம் அனைவரும் முகங்கொடுத்த, கொடுத்துவருருரும் துன்பங்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு தேவையான எதிர்கால திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருகின்றது.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *