இனப்படுகொலையாளிகளான ராஜபக்ஷாக்களைப் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என்பதனாலேயே
கையொப்பம் வைக்கப்பட்டது.கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைத்ததன் அர்த்தம் சஜித்திலோ ரணிலிலோ அல்லது பொன்சேகாவிலோ நம்பிக்கையுள்ளது என்பதல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக எதிர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அதற்காகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டாது!
அரசியல் தீர்வற்ற வெறும் ஆட்சி மாற்றங்களுக்குக் கொடிபிடிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாதுஅவ்வாறு கொடி பிடிப்பதனால் தமிழினத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதுமில்லை!
அவர்களின் போராட்டம் வறுமைக்கானது!
எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது!
அரிசி, பருப்பின் விலை குறைந்தால் அவர்களின் போராட்டம் முடியும்!
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும்!
போராட விரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகள் 1500 நாட்களைக் கடந்தும் தெருவில் போராடிக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளோடு கைகோருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment