சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று (17) அதிகாலை வோஷிங்டன் நோக்கி பயணிமாகியுள்ளனர்.
குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.659 ரக விமானத்தில் இன்று அதிகாலை 5.07 அளவில் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய குழுவினர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்கள்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் இந்திய தரப்பினர் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை நாடு மிகவும் பலவீனமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
Be First to Comment