புதிய அமைச்சரவை இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 3 ஆம் திகதி முன்னாள் அமைச்சர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியிருந்தனர். இதனையடுத்து நாடாளுமன்றம் மற்றும் அத்தியாவசிய அரச சேவைகளை முன்னெடுத்து செல்வதற்காக ஜனாதிபதியினால் 4 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
எனினும், புதிய அமைச்சரவையில் தமக்கு எவ்வித அமைச்சுப்பொருப்புக்களையும் வழங்க வேண்டாம் என ஆளும் கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், பல புதியவர்கள் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் தற்போதுள்ள பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், தினேஸ் குணவர்தன, அலி சப்ரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு மேலதிகமாக ரமேஸ் பத்திரன, திலும் அமுனுகம, செஹான் சேமசிங்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Be First to Comment