Press "Enter" to skip to content

புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.

அதன்படி,

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றன

தினேஷ் குணவர்தன பொதுசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சராகவும்,

டக்ளஸ் தேவானந்தா மீன்பிடித்துறை அமைச்சராகவும்,

ரமேஷ் பத்திரண கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும்,

பிரசன்ன ரணதுங்க பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,

திலும் அமுணுகம போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,

கனக்க ஹேரத் பெருந்தெருக்கள் அமைச்சராகவும்,

விதுர விக்கிரமநாயக்க தொழில் அமைச்சராகவும்,

ஜானக்க வக்கும்புர விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும்,

ஷெஹான் சேமசிங்க வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சராகவும்,

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா நீர்வழங்கல் அமைச்சராகவும்,

விமலவீர திசாநாயக்க வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராகவும்,

கஞ்சன விஜேசேகர வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராகவும்,

தேனுக விதானகமகே இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும்,

கலாநிதி நாலக்க கொடஹேவா ஊடகத்துறை அமைச்சராகவும்,

பேராசிரியர் சன்னஜயசுமன சுகாதார அமைச்சராகவும்,

ஹாஃபீஸ் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராகவும்,

பிரமித்த பண்டார தென்னக்கோன் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *