ரம்புக்கனையில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு அமெரிக்கா, கனடா தூதுவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ருவிட்டர் பதிவில்,
“ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எந்தவொரு வன்முறையையும் நான் கண்டிக்கிறேன். அத்துடன், அங்கு அமைதி திரும்ப அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தனது அறிக்கையில், “ரம்புக்கனையில் இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். அதிகபட்ச கட்டுப்பாடு அவசரமாக தேவை. வன்முறையை தூண்டுபவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரம்புக்கனை சூட்டு சம்பவத்துக்கு அமெரிக்கா, கனடா கண்டனம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
- அநுரவின் வெற்றியை முன்னிட்டு… பருத்தித்துறையில் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்த கூட்டம்!
- வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்
- அரசியலுக்கு ‘குட் பாய்’! தம்மிக்க பெரேரா எடுத்த அதிரடித் தீர்மானம்
- வங்குரோத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணிலை கண்டுகொள்ளாத மக்கள்..! வஜிர ஆதங்கம்
- பொதுத் தேர்தலில் களமிறங்க தயங்கும் காஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள்! வெளியான தகவல்
Be First to Comment