நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவைதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இன்று அமைச்சின் அதிகாரிகளுடன் கரந்துரையாடினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையடலில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொலாழில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக பிரதேச ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, பூரணமான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர், அமைச்சு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற அசௌகரியங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இதன்போது கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment