பெற்றோலிய போக்குவரத்திலிருந்து இன்று (20) விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கை களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பௌசர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப் படுமாயின், போக்குவரத்தை தொடர்வது குறித்து பரிசீலிக்கலாம் என கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment