30ஆயிரம் லீற்றர் எரிபொருள் கொண்ட பவுசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுக்கவே பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர் என்று பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை போராட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ஏற்படக்கூடிய பெரும் சேதங்களை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும்போது அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை பொலிஸ் தலைமையகம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கிறது என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்
Be First to Comment