உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையில் பல விசேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Be First to Comment