2022ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்ரோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த நிலையில் பாடசாலைகள் மூடப்படுவதால், ஒக்ரோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2022 உயர்தரப் பரீட்சை பாடங்களும் திகதிகளுடன் தொடர்புடைய நேர அட்டவணையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நேர அட்டவணை பின்னர் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ www.doenets.lk இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment