முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 6 பேரை புதுக்குடியிருப்புப் காவல்துறையினர் நேற்று (21) கைது செய்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து வாள் மற்றும் திருடப்பட்ட நகைகள் சிலவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் புதுக்குடியிருப்பு, கோம்பாவில், தேவிபுரம், விஸ்வமடு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளில் தங்க நகை மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் முழங்காவில் மற்றும் செல்வபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 30 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment