பொகவந்தலாவயில் வீதிகளில் டயர்கள் எரித்ததால் கார்பெட் வீதிகளுக்கு சேதம்
By admin on April 22, 2022
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொகவந்தலாவ நகர மையத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் டயர்களை எரித்து எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பொகவந்தலாவ நகர மையத்தின் பிரதான வீதியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் பெருமளவு பணம் செலவழித்து கார்பெட் வீதி திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
இதையடுத்து நோர்வூட் பிரதேச சபை ஊழியர்கள் சேதமடைந்த வீதியின் பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Be First to Comment