லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
விலையை அதிகரிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அரசாங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Be First to Comment