நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று நகரத்தில் சென்று நிறைவடைய உள்ளது.
குறித்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கர வண்டி சாரதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Be First to Comment