கொழும்பில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை இன்று ( ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர் .
இந்நிலையில், கொழும்பின் பிரதான இடங்களுக்குச் செல்லும் வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன .
இதேவேளை அவ்வழியாக பயணிக்க வேண்டிய பஸ்கள், வேறு வழிகளுக்கு திரும்பிவிடப்படுகின்றதோடு நடந்துச் செல்வோர் கூட இரும்பு வேலிக்குள் நுழைய முடியாத அளவில், மிக நெருக்கமாக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட இடங்களிலேயே வீதிகளை முழுமையாக மறைத்து இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொலிஸ்சார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
Be First to Comment