ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று (24) ஊர்வலமும் வாகன பேரணியும் ஆரம்பமானது.
போராட்டக்காரர்கள் மினுவாங்கொடையை வந்தடைந்ததையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (23) பிற்பகல் மற்றும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Be First to Comment