Press "Enter" to skip to content

பிரதமரின் விஜேராம வீட்டு வளாகத்தில் இருந்து வெளியேறிய பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பிலிருந்து ஊர்வலமாக சென்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் விஜேராம வீதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரின் வீட்டுக்கு அருகில் இருந்த வீதித் தடைகளை அகற்ற மாணவர்கள் முயற்சித்ததால் மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் இன்று பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்ட பேரணிகள் காரணமாக காலி முகத்திடலுக்குச் செல்லும் வீதி உட்பட பல வீதிகள் காவல்துறையினரால் வீதித் தடைகளினால் மூடப்பட்டிருந்தன.

முன்னதாக அவர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து காலி முகத்திடலுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில், விஜேராமவில் உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன்பாக காத்திருந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து அங்கிருந்து செல்ல தயாராகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *