தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நிலையான ஆட்சி அவசியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சூரியனின் செய்தி முகாமையாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விடயத்தில் தாம் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
Be First to Comment