புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இன்று (25) முதல் முறையாக அமைச்சரவை கூடவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த அமைச்சரவை கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிய அமைச்சர்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் அதன் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியனவற்றினால், கடந்த நாடாளுமன்ற வாரத்தில், சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட யோசனை திட்டங்களும் அமைச்சரவைக்கு இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கமைய, சகல யோசனைகளையும் ஆராய்ந்து 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 21ஆம் திருத்தச் சட்டத்தை எதிர்காலத்தில் அமைச்சரவையின் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment