ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் அளிக்க தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தனகல்ல – ஊராபொல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குழுவினருக்கு உலர் உணவு வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்
Be First to Comment