ராஜபக்சாக்களுடன் உள்ள தொடர்பு குறித்து உகன்டாவின் செரெனிட்டி குழு தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் செரெனிட்டிகுழுமம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிற்கே அந்த குழுமம் பதிலளித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினருடன் வர்த்தக தொடர்புள்ளதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அந்த தவறான கருத்து குறித்து தெளிவுபடுத்துவதற்காக சட்ட ஆலோசனையை செரென்டிப் குழுமம் பெற்றுள்ளது.
இலங்கை அரசியல்வாதிகள் அரசாங்கத்திடமிருந்து எந்த நிதிஉதவியையும் பெறவில்லை என அந்த செரெனிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.
செரெனிட்டி குழுமமும் அதன் துணை நிறுவனங்களும் இயற்கையான வளர்ச்சியை கண்டுள்ளன பல இலங்கையர்களுக்கும் உகன்டா மக்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன இலங்கைக்கு தொடர்ச்சியாக அந்நிய செலாவணியை அனுப்பிவைப்பதன் மூலம் அந்த நாட்டிற்கு உதவி வருகின்றோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயக்குநர்கள் ருவான் ஜெயரட்ண தேவகஎக்கநாயக்கவின் வர்த்தக நலன்களை அடிப்படையாக கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது-உகன்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்தார் என செரெனிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.
இது 2016 மே மாதம் இடம்பெற்றது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
Be First to Comment