சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்குமாறும் வரிகளை உயர்த்துமாறும் கோரியுள்ளது.
இலங்கை நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் செயற்பாட்டுப் பணிப்பாளர் Anne Marie தெரிவித்துள்ளார்.
முக்கியமான செலவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் இலங்கைப் பிரதிநிதிகளுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment