அரசாங்கமானது நாட்டை அதளபாதாளத்துக்கு கொண்டு சென்றது மட்டுமன்றி அரசியல் நாடகமொன்றை ஆடுகின்ற நிலையில் எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரச்சினைகளை தட்டிக்கழிப்பதனூடாக மக்களிடம் அரசியல் நாடகமொன்றை அரங்கேற்றுகின்றனர் என்று சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என்பது நிருபணமாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த நாட்டை அதளாபதாளத்துக்கு கொண்டு சென்றது நாம் யாவரும் அறிந்ததே.
இவ்வாறானதொரு நிலையில் எதிர்க் கட்சி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிடுவது தெளிவாகின்றது.
நாட்டில் சகல மக்களும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கூறும்போது எதிர்க் கட்சியானது வேறு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது.
மக்களின் போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டியது எதிர்க் கட்சியின் பிரதான பொறுப்பாகும்.
மக்களின் போராட்டத்துக்கு தோள் கொடுக்காது அந்தப் போராட்டத்தை வெல்லும் பொறுப்பைத் தவிர்க்கும் எவரும் இந்த நாடாளுமன்றத்துக்குத் திரும்பக் கூடாது.
இந்த நேரத்தில் நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சனையை தவிர்க்கும் எவரையும் நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.





Be First to Comment