Press "Enter" to skip to content

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் கடந்த வருடம் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலை நினைவு கூர்ந்த தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் தலைமையில் கடந்த மே 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலை நினைவு கூர்ந்து கிரான் கடற்கரையில் சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தனர்.

இந்த நினைவேந்தலை நினைவு கூர்ந்த வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் உட்பட 10 பேரை கல்குடா பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் கடந்த டிசம்பர் 8 ம் திகதி 10 பேரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் பிணையில் விடுவித்தார்​.

குறித்த 10 பேருக்குமான வழக்கு இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இவர்கள் அனைவரையும் நீதவான் இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து தீர்ப்ளித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *