நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் சில கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவி நீக்கம் இரண்டு வழிகளில் இடம்பெறலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் நடவடிக்கை குறித்து மட்டுமே பேசி வருகிறோம். பிரதமர் பதவி விலகுவாரா? பிரதமரை ஜனாதிபதி நீக்குவாரா? என்பது எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வ கட்சி ஆட்சி என்பது ஒரு அல்லது இரு கட்சியால் மட்டும் செய்யக்கூடிய ஒன்றல்ல. எனவே, இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்
Be First to Comment