Press "Enter" to skip to content

புலஸ்தினியை தேடி தோண்டும் பணி ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள குறித்த சடலங்கள் DNA பரிசோதனைக்காக இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பெரியவர்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுள் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் என்றழைக்கப்படும் சாரா ஜாஸ்மினின் உடல் உறுப்புகள் DNA பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனால் உடல் உறுப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சடலங்களை தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *