பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் இணைந்துள்ளார் என்று அறிய வருகிறது.
அரசாங்கத்துக்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை வழங்கி வருகின்றார் எனவும், ஜனாதிபதி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர் செயல்படுகின்றார் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது அரசு பதவி விலக வேண்டும் என்ற யோசனை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளது.
Be First to Comment