அலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அலைபேசியில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப் போன அவர் இன்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய நிலையில் ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது அலைபேசி என்பன காணப்பட்டுள்ளன.
சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை வீடியோ கேம் விளையாடிய பல இளைஞர்கள் இந்தியாவில் உயிர் மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment