யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இருந்து இன்று காலை தமிழ்நாட்டின் தொண்டிப் பகுதிக்குச் சென்ற இருவரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பல்வேறு கட்டமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்கின்றனர்.
இதேநேரம் இன்று அதிகாலை 4 மணி அளவில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த சீலன் 27 வயது மற்றும் அருள்ராஜ் வயது 34 ஆகிய இருவருமே படகு மூலம் கடல் வழியாக தொண்டி பகுதிக்கு சென்றனர்.
தமிழ்நாடு தொண்டி கடலோர காவல் கடற்கரைக்கு சென்று இருவரையும் கடற்கரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய பொலிசார் இருவரும் மீனவராக காணப்படுகின்றபோதும் குடும்பங்களை விட்டு தனியாக வந்துள்ளனர்.
இதேநேரம் இவர்களே படகோட்டிகளகவும் காணப்படுவதனால் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Be First to Comment