அரசாங்கத்தினால் உள்நாட்டில் பெறப்பட்ட கடன்களை திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் என மறுசீரமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதே இலங்கை அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்களை நடத்தியது.
இதில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும் ஆளுநர் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கு விளக்கமளித்தார்.
Be First to Comment