Press "Enter" to skip to content

பலாலி பகுதியூடாக தமிழகம் செல்ல முற்பட்ட 13 பேர் கடற்படையினர் கைது !

யாழ்ப்பாணம் பலாலி பகுதியூடாக படகேறி தமிழகம் செல்ல முற்பட்ட 13 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்வோர் தொகை அதிகரித்து செல்கின்றது.

இதற்கமைய நேற்று இரவும் தமிழகம் செல்லும் நோக்கில் ஒரு கடகில் பயணித்த 13 பேரே இன்று அதிகாலை கடலில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 13 பேரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *