பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டம் – நந்தலால் வீரசிங்க
By admin on April 30, 2022
உலக வங்கியின் அனுசரணையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதன் மூலம் பயனடைபவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டும் பொருளாதார நெருக்கடியானது வறுமையில் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது எனவும், பணவீக்கம் உயர் மட்டங்களுக்கும் உயரக்கூடும் என்றார்.
எனவே, நிதியமைச்சின் கீழ் அடுத்த மாதம் நடைபெறவுள்ள முதற்கட்டமாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment