மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே தனது டுவிட்டரில் நேற்றைய தினம் அவர் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் ´உரிமையாளர்களும் கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்´ என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment