யுக்ரைனுடனான மோதல் காரணமாக சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில் மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதன் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.
இது குறித்து இலங்கை கனியவள கூட்டுதாபனம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் திறைசேரி அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்குள்ளாகியுள்ள ரஷ்யாவுடன் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ராஜதந்திர அனுமதிகள் அவசியமாக உள்ளன.
இதன் காரணமாக திறைசேரி, இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் வினவியுள்ளது.
யுக்ரைன் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 107 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யை 35 அமெரிக்க டொலருக்கு பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment