எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர் – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க ஆளும் தரப்பு தயாராகவே இருக்கின்றோம்,
இதேநேரம் எதிர்க்கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்..
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை மறுதினம் புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment