இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்ற பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டார்.
நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவருடன், செந்தில் தொண்டமான் ஆகியோரும் சென்றுள்ளனா்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை தொடர்ந்து, நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனையடுத்து காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.
இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தின் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார்.
இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment