கொழும்பு -காலி முகத்திடலில்முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் 24ஆவது நாளாக தொடரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாண மக்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அருட்தந்தையர்களான கிங்சிலி,குனே,நதிர,சுஜிதர் சிவநாயகம்,பிரின்சன்,றிச்சட் சொருபன்.
ஜெகதாஸ் ஆகியோர்களும் மேலும் வடக்கு கிழக்கில் உள்ள அருட் தந்தையர்கள் மற்றும் தென் பகுதியிலுள்ள அருட் தந்தையர்களும் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ்ச உள்ளிட்ட அனைத்து ராஜபஷ்சாக்களும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யவேண்டும்.வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Be First to Comment