சிறிலங்காவில் அமையவுள்ள தேசிய ஒருமித்த அரசில் இணைய ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைய மறுத்து உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
தேர்தலை நடத்துமாறு கோருகின்ற போதிலும், தற்போது தேர்தலை நடத்துவதற்கு அரச தலைவருக்கு அதிகாரம் இல்லை.
ஆறு மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அரச தலைவருக்கு உள்ளது
அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். எவ்வாறாயினும், எவருக்கும் போதிய வாக்குகள் இல்லை.
இந்த தருணத்தில் மக்கள் தேர்தலை கோரவில்லை. சஜித்துக்கோ அல்லது அநுரவுக்கோ மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க ஆர்வம் இல்லை என்றார் அவர்
Be First to Comment