பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் (IUBF) இன்று (03) ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.
விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மத்திய வங்கிக்கு அருகில் இருந்த பொலிஸ் வீதித் தடையையும் அகற்றியதுடன் உலக வர்த்தக மையங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் வீதித் தடையையும் அகற்றியிருந்தது.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சம்மேளனம், பின்னர் காலி முகத்திடல் போராட்ட இடத்துக்கு பேரணியாகச் சென்றது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இவ்வாறானதொரு குழுவினர் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Be First to Comment