யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியிலுள்ள மக்களால் சிறுமி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment