இம்மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய அமர்வில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய பிரதி சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
தேசிய ஒருமித்த அரசாங்கத்தை நியமிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைப் பெற நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் நேற்று (03) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
Be First to Comment