சாவற்கட்டு பகுதி இளைஞன் நேற்றய தினம் இரவு நடத்தப்பட்ட கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின்போது 20 வயது இளைஞன் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான 492 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் மார்க்கமாக வெளிவரும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பரந்தளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடற்படையினர் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (3) இரவு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் படகை சோதனையிட்டபோது 15 சாக்குகளில் அடைக்கப்பட்ட 225 பொதிகளில்
சுமார் 492 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன், இதன்படி, சந்தேக நபருடன் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றும் ஒரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு
ரூ.123 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், கேரள கஞ்சா மற்றும் படகுகளுடன் மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Be First to Comment