பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை, தேசிய சுதந்திர முன்னணி
தலைவர் விமல் வீரவன்ச தவிர்த்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின், பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, அரசாங்கத்தின் மீதான
அதிருப்தி காரணமாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றது.
பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற போது, தேசிய சுதந்திர முன்னணி யாருக்கு
ஆதரவு வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தவிர்த்துக்கொண்டார்.
எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் விமல் பங்கேற்கவில்லை!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment