நாடாளுமன்றத்தில் தற்போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.
அதேபோல, எதிரணியின் பக்கமாக நின்றிருந்தவாறு வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்து, “எந்த இரகசியமும் இல்லை” என்றார்.
அப்போது, ஆளும் கட்சியில் இருந்த சில, “எதிரணியினர் இரகசியத்தை பற்றி பேசுகின்றனர். எனினும், இரகசியத்தை பாதுகாக்க தெரியவில்லை” என்றனர்
Be First to Comment