இன்று (06) பிற்பகல் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 5.30 அளவில் இந்த விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்
Be First to Comment